இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
தமிழ் படங்களின் கேரள விநியோகஸ்தராக இருந்தவர் சிபு தமீம்ஸ். குறிப்பாக விஜய் படங்களை கேரளாவில் பெரிய அளவில் விநியோகித்தவர். விஜய் நடித்த புலி, விக்ரம் நடித்த இருமுகன் உள்பட பல படங்களை தயாரித்துள்ளார். இவரது மகன் ஹிருது ஹாருன், தக்ஸ் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அவருடன் பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனீஷ்காந்த், அனஸ்வர ராஜன், சரத் அப்பானி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். நடன இயக்குனர் பிருந்தா இயக்கி உள்ளார். வருகிற 24ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகிறது.
இந்த படத்தை அண்ணனுக்காக தயாரிப்பவர் தங்கை ரியா ஷிபு. இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்த திரைப்படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஒட்டு மொத்த டீமும் அபாரமான வேலையைச் செய்திருக்கிறார்கள். தக்ஸ் பெரிய வெற்றியைப் பெறும் எனும் நம்பிக்கை உள்ளது. என் அண்ணன் ஹிருது இந்தப் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன் என்கிறார்.