திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
பழம்பெரும் வில்லன் நடிகர் எம்என் நம்பியார் 200 படங்களுக்கு மேல் அடித்த அவர் எம்ஜிஆருக்கு வில்லனாக நடித்து புகழ்பெற்றார். மிகச் சிறந்த ஐய்யப்ப பக்தரான அவர் ஐய்யப்ப வழிபாடு தமிழ்நாட்டில் பரவுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.
நம்பியாருக்கு சுகுமாரன், மோகன் என்ற மகன்களும், சினேகலதா என்ற மகளும் உள்ளனர். நம்பியாரின் சொத்துக்கள் பாகப்பிரிவினை செய்யப்பட்ட பின் சுகுமாரன் காலமாகிவிட்ட நிலையில், சுகுமாரனின் மகனும், நம்பியாரின் பேரனுமான சித்தார்த் சுகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவில் "தனது தாத்தா நம்பியாரின் 500க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், விருதுகள் மற்றும் கோப்பைகள், சபரிமலை மற்றும் ஐய்யப்பனின் ஓவியங்கள், பூஜை பொருட்கள் உள்பட அவர் பயன்படுத்திய பொருட்கள் எனது அத்தையின் (நம்பியார் மகள்) வசம் உள்ளது. அந்த பொருட்களை எனக்கு தருவதாக ஒப்புக்கொண்ட எனது அத்தை தற்போது தர மறுக்கிறார். எனவே அந்த பொருட்களை என்னிடம் வழங்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் குறிப்பிடப்பட்ட விருதுகள் மற்றும் பூஜை பொருட்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் ஒருவரை நியமித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சினேகலதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், "தனது தந்தை நம்பியார் பயன்படுத்திய பொருட்கள் தனக்குதான் சொந்தம். எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிமன்றம், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்ததுடன், நம்பியாரின் வீட்டில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மேலும் ஒரு வழக்கறிஞரை நியமித்தது.