தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதன்பிறகு துரோகி, ராட்சசன், கட்டா குஸ்தி உள்பட பல படங்களில் நடித்த தற்போது ஐஸ்வர்யா ரஜினி இயக்கி வரும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். தனது முதல் மனைவி உடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவரை விவாகரத்து பெற்ற விஷ்ணு விஷால் பின்னர் விளையாட்டு வீராங்கனை ஜூவாலா கட்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் விஷ்ணு விஷால் சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவு ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. அந்த பதிவில், ‛‛பரவாயில்லை, நான் மீண்டும் முயற்சி செய்தேன், தோற்றுவிட்டேன். மீண்டும் கற்றுக் கொண்டுள்ளேன்.என் தோல்வியோ என் தவறோ கிடையாது. அது ஒரு துரோகம் மற்றும் ஏமாற்றம்'' என குறிப்பிட்டார். ஆனால் பின்னர் அந்த பதிவை நீக்கிவிட்டார்.
இதையடுத்து இரண்டாவது மனைவியான ஜுவாலாவிற்கும் விஷ்ணு விஷாலுக்கும் பிரச்னை, இவரையும் பிரிகிறீர்களா விஷ்ணு என பலரும் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ''எனது பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அது என் வாழ்க்கை சம்பந்தப்பட்டது அல்ல, தொழில் சம்பந்தப்பட்டது. ஒருவருக்கு நாம் கொடுக்கும் கிப்ட் நம்பிக்கையே. ஆனால், தோற்கும்போது நாம் நம்மையே குறை கூறுகிறோம். அப்படி இருக்க தேவையில்லை. இதை தான் சொல்ல வந்தேன்'' என விளக்கமளித்துள்ளார் விஷ்ணு விஷால்.