தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை தழுவி உருவாகும் இந்த படத்தில் ராமராக பிரபாஸ், சீதையாக கிருத்தி சனோன், லட்சுமணனாக சன்னி சிங், ராவணனாக சைப் அலிகான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டர்கள், வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது.
இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தின் டிரெய்லர் மே 9ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த டிரெய்லரானது இந்தியாவில் மட்டுமின்றி 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அந்தவகையில் இந்தியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் நியூசிலாந்து, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், ஹாங்காங், ஜப்பான், இலங்கை, ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் வெளியிட உள்ளனர்.
ஆதிபுருஷ் படம் நியூயார்க்கில் நடைபெற்ற ட்ரீ பெகா சர்வதேச திரைப்பட விழாவில் பிரத்யேகமாக திரையிடப்பட்டு கவனம் பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகிறது.