இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ஜெயிலர். அனிரூத் இசையமைக்கிறார். இதில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 10 அன்று வெளியாகும் என்று அறிவித்தனர். தற்போது படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தின் இசையை பிரமாண்டமாக வருகின்ற ஜூலை மாதத்தில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்பு வருகின்ற ஜூன் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகும் என கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.