நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷ். 2013ல் வெளிவந்த 'கௌரவம்' படத்தின் மூலம் தமிழ், தெலுங்கில் அறிமுகமானார். அதன்பின் தெலுங்கில் சில படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடித்துள்ளார்.
அவரது அடுத்த படமாக நேற்று 'பட்ட்டி'(Buddy) என்ற படம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் ஆர்யா நடித்து வெளிவந்த 'டெடி' படத்தின் ரீமேக்காக அப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த 'டெடி' பொம்மையுடன் அல்லு சிரிஷ் இருக்கும் போஸ்டரைத்தான் நேற்று வெளியிட்டார்கள். கூடவே, ஒரு முன்னோட்ட வீடியோ ஒன்றும் வெளியானது.
ஆனால், படத்தை 'டெடி' ரீமேக்காக எடுக்கவில்லையாம். வேறு ஒரு கதையை எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். தமிழ் இயக்குனரான சாம் ஆண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். 'டெடி' பொம்மையை மட்டும் ஒரு கதாபாத்திரமாக வைத்துக் கொண்டு புதிய கதையை எழுதியிருக்கிறார்களாம். அது என்ன மாதிரியான கதை என்பது படம் வெளிவந்த பிறகே தெரியும்.
இதனிடையே, இப்படம் குறித்து போட்ட டுவிட்டர் பதிவுகளில் கமெண்ட் பகுதியை ஆப் செய்து வைத்திருக்கிறார் அல்லு சிரிஷ்.