தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பிரபாஸ் நடித்து வரும் பிரமாண்ட பான் இந்தியா படம் 'புராஜக்ட் கே'. இதில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி நடித்து வருகின்றனர். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்காக அவருக்கு பல கோடி சம்பளம் கொடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியானது.
இப்படத்தினை தேசிய விருது பெற்ற 'மகாநடி' பட இயக்குனர் நாக் அஸ்வின் இயக்குகிறார். சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகி வரும் இந்த படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் 'புராஜெக்ட் கே' படத்தின் டைட்டில், டீசர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை பிரமாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் “இம்மாதம் 20ம் தேதி அமெரிக்காவில் சாண்டியாகோவில் நடைபெறவுள்ள காமிக்கான் என்ற சர்வதேச மாநாட்டில் டைட்டில் மற்றும் டீசர், ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை வெளியிடுகிறோம். உலக ரசிகர்களின் விருப்ப மேடையான காமிக்கான் மேடையில் முதல் முறையாக மேடையேறும் இந்திய திரைப்படம் என்ற பெருமையை 'புராஜெக்ட் கேக் படம் பெறுகிறது” என்று அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.