தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நடிகை சமந்தா தற்போது இந்தியில் சிட்டாடல் என்கிற வெப் சீரிஸிலும், இன்னொரு பக்கம் தெலுங்கில் குஷி என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இதில் குஷி படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்துள்ளார் சமந்தா. இந்த படத்தை சிவா நிர்வானா என்பவர் இயக்கி வருகிறார். தற்போது இந்த படத்தின் பாடல் காட்சியின் போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. இதனால் நெட்டிசன்கள் பலரின் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார் நடிகை சமந்தா.
காரணம் இந்த போஸ்டரில் ஒரு சோபாவில் சமந்தா அமர்ந்திருப்பது போலவும் இன்னொரு புறம் காலை நீட்டி படுத்துள்ள விஜய் தேவரகொண்டா ஏதோ மும்முரமாக எழுதிக் கொண்டிருக்கும் சமந்தாவின் கைமீது தனது கால் விரலால் தொடுவது போலவும் உருவாக்கப்பட்டுள்ளது. சமந்தாவை நெட்டிசன்கள் வறுத்து எடுப்பது இந்த போஸ்டரில் இப்படி ஒரு நிலையில் சமந்தா இருப்பதற்காக அல்ல..
பத்து ஆண்டுகளுக்கு முன்பு மகேஷ்பாபு நடித்த நம்பர் ஒன் நேனொக்கடினே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது அதில் கதாநாயகியாக நடித்த கிரித்தி சனோன் கடற்கரையில் நடந்து செல்லும் மகேஷ் பாபுவின் பாதங்களை தவழ்ந்தபடியே பின் தொடர்ந்து செல்வது போல உருவாக்கப்பட்டிருந்தது. மிகவும் பிற்போக்குத்தனமாக இருப்பதாக அப்போது நடிகை சமந்தா இந்த போஸ்டருக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார். அப்படி கூறியிருந்த சமந்தாவுக்கே இப்போது இப்படி ஒரு போஸ்டர் வெளியாகி உள்ளதே.. கர்மா இஸ் பூமராங் என, முன்பு அவர் கூறிய கருத்தையே மேற்கோள் காட்டி தற்போது நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.