துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' தொடர் மூலம் பிரபலமானவர் கவின். தொடர்ந்து சில சீரியல்களில் நடித்திருந்தார். அதன் பிறகு 2017ம் ஆண்டு வெளியான 'சத்ரியன்' என்ற படத்தின் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார். 2019ம் ஆண்டு நடந்த 'பிக்பாஸ்' சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதியிலேயே வெளியேறினார். இதனைத் தொடர்ந்து 'நட்புனா என்னான்னு தெரியுமா', 'லிப்ட்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் கவின் நடித்து வெளியான 'டாடா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், தனது காதலியான மோனிகாவுடன் கவினுக்கு இன்று (ஆக.,20) சென்னையில் திருமணம் நடைபெற்றது. உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கவினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.