'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி | அமலாக்கத்துறை முன் விஜய் தேவரகொண்டா ஆஜர் | பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? | ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? |
மலையாள சினிமாவின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவரான மம்முட்டிக்கு நேற்று பிறந்தநாள். மம்முட்டியின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் அவரது மகனும் நடிகருமான துல்கர் சல்மான் வெளியிடும் பதிவு கவனிக்கத்தக்கதாக இருக்கும். அந்த வரிசையில் நேற்று அவர் தந்தையின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி வெளியிட்டிருக்கும் பதிவு வைரலாக பரவியது.
அவர் தனது வாழ்த்து பதிவில் “நான் சிறுவனாக இருந்தபோது உங்களைப்போல ஆக வேண்டும் என ஆசைப்பட்டேன். நான் முதன் முறையாக கேமரா முன்னால் நின்றபோது உங்களைப் போன்ற நடிகனாக வேண்டும் என விரும்பினேன். தந்தையானபோது நான் ஆக விரும்பிய அனைத்தும் நீங்களாக இருந்தீர்கள். என்றாவது ஒரு நாள் உங்களில் பாதியாக இருப்பேன் என்று நான் நம்புகிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அதாவது என் வாழ்நாளில் நீங்கள் படைத் சாதனைகளில் பாதியையாவது நான் படைத்து விடுவேன் என்கிற பொருள்படும்படியான இந்த பதிவு துல்கர் தந்தை மீது கொண்டிருக்கும் அன்பு. தன் மீது கொண்டிருக்கும் தன்னம்பிக்கை இவற்றை குறிப்பதாக பலரும் துல்கரை பாராட்டி வருகிறார்கள். இந்த பதிவுடன் தந்தையுடன் நிற்கும் கருப்பு வெள்ளை படத்தையும் துல்கர் வெளியிட்டுள்ளார்.