தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். பிரேமம் என்ற ஒற்றை படம் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தார். நேரம் படத்தையும் இவர் தான் இயக்கினார். முதல் இரண்டு படங்கள் தந்த வரவேற்பு அடுத்து அவர் இயக்கத்தில் வெளியான ‛கோல்டு' படத்திற்கு கிடைக்கவில்லை. இதில் பிருத்விராஜ், நயன்தாரா நடித்திருந்தனர். இந்த படத்தின் தோல்விக்காக வருத்தம் தெரிவித்த அல்போன்ஸ் அடுத்த படத்தை அதை சரி செய்வதாக கூறினார்.
தற்போது சாண்டி மாஸ்டரை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் சினிமா படம் மட்டும் இனி இயக்க மாட்டேன், விலகுவதாக அறிவித்துள்ளார் அல்போன்ஸ். இதுதொடர்பாக இன்ஸ்டாவில் அவர் வெளியிட்டு பின்னர் நீக்கிய பதிவில், ‛‛தியேட்டர்களுக்கான படங்கள் இயக்குவதை நிறுத்த போகிறேன். எனக்கு ‛ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம்' குறைபாடு கண்டறியப்பட்டுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளேன். ஆனால் தொடர்ச்சியாக ஆல்பம், குறும்படங்கள் மற்றும் ஓடிடி தொடர்பான படங்களை எடுப்பேன். நிச்சயமாக சினிமாவை விட்டு போக மாட்டேன். ஏனென்றால் அதைதவிர எனக்கு வேறு வழியில்லை'' என தெரிவித்துள்ளார்.
அல்போன்ஸ் புத்ரனின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.