தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
1983ம் ஆண்டில் டி.ராஜேந்தர் இயக்கி, நடித்த 'உயிருள்ள வரை உஷா' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கங்கா (63). நளினி ஜோடியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கரையை தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி, லட்சுமி வந்தாச்சு, அம்மா பிள்ளை, தங்கமான ராசா, முருகனே துணை போன்ற பல படங்களில் நடித்தார். சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் சின்னத்திரை தொடர்களில் நடித்தார். சில தொடர்களை இயக்கியும் உள்ளார்.
உடல் நலக்குறைவு காரமாக சினிமாவை விட்டு விலகிய கங்கா, சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் உள்ள அவரது அண்ணன் மகன் மயில்வாகனன் வீட்டில் வசித்து வந்தார். திருமணம் செய்து கொள்ளாத கங்காவை மயில்வாகனன்தான் கவனித்து வந்தார். 63 வயதான கங்கா நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது சொந்த ஊரான சிதம்பரம் அருகேயுள்ள பரதூரில் இன்று இறுதி சடங்கு நடக்கிறது.