துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
பொன்னியின் செல்வன், லியோ படங்களுக்கு பிறகு அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் திரிஷா. இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக்லைப் என்ற படத்தில் நடிக்கப் போகிறார். இந்நிலையில் தற்போது விடாமுயற்சியில் நடித்துக்கொண்டே மலையாளத்தில் டொவினோ தாமஸ் நாயகனாக நடித்து வரும் ஐடெண்டிட்டி என்ற படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் திரிஷா.
அவர்களுடன் வினய்யும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இந்த ஐடெண்டிட்டி படத்தில் தான் ஒரு கார் சேஸிங் காட்சியில் நடித்த ஒரு வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் திரிஷா. அதில், அவர் கார் சேஸிங் காட்சியில் நடிப்பது போன்றும், அந்த காட்சியை ட்ரோன் கேமரா மூலம் படமாக்குவதும் இடம்பெற்றிருக்கிறது.