2025ம் ஆண்டின் கடைசி வார வெளியீடுகள் | பராசக்தி உருவாக காரணமாக இருந்த ஜி.வி.பிரகாஷ் | மத்திய அமைச்சர் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்த நடிகை ஆம்னி! | சண்முக பாண்டியனின் 'கொம்புசீவி' படத்தின் வசூல் நிலவரம் | திலீப் படத்தில் விஜய் புகழ் பாடிய மோகன்லால் | மம்முட்டியின் களம்காவல் படம் சர்வதேச வசூலில் புதிய சாதனை | கார் விபத்தில் நடிகை நோரா பதேஹி காயம் | மலையாள நடிகர் சீனிவாசன் மறைவு ; ரஜினிகாந்த் இரங்கல் செய்தி | மார்ச் மாதத்திற்கு தள்ளிப்போகும் கருப்பு படம்! | ‛டாக்ஸிக்' படத்தில் நாடியாவாக கியாரா அத்வானி! |

தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பிரபாஸ், ஜூனியர் என்டிஆர், ராம்சரண், நானி உள்ளிட்ட பல இளம் நடிகர்கள் பிரபல இயக்குனர் ராஜமவுலியின் டைரக்சனின் நடித்து விட்டனர். ஆனால் உச்சத்தில் இருக்கும் நடிகர் மகேஷ்பாபு இதுவரை ராஜமவுலி டைரக்சனின் நடிக்காதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய குறையாக இருந்தது. இந்த நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை ராஜமவுலி இயக்குகிறார் என்பது கடந்த வருடமே அறிவிக்கப்பட்டு விட்டது.
தற்போது இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் முடிவடைந்து விட்டதாக ராஜமவுலியின் தந்தையும் அவரது படங்களின் கதை இலாக்காவில் முக்கிய பங்கு வகிப்பவருமான விஜயேந்திர பிரசாத் கூறியுள்ளார் இந்த படத்தின் சில தொழில்நுட்ப பணிகளை மேற்கொள்வதற்காக நடிகர் மகேஷ்பாபு தற்போது தனியாக சென்று ஜெர்மனிக்கு பயணம் கிளம்பி சென்றுள்ளதும் அதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.