மறைந்த தேவா குடும்பத்தினருக்கு சூர்யா ஆறுதல் | 'ராமாயணா' படத்தில் சின்ன சின்ன விஎப்எக்ஸ் குறைகளை கண்டுக்காதீங்க: யஷ் பேச்சால் சலசலப்பு | 'சத்துல பதுக்கம்மா' திருவிழாவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | ஜெயிலர் 3க்கு இப்போதே கதை எழுதும் ரசிகர்கள் : வெளியாகும் ரீல்ஸ்கள் | 'ராமாயணா': இன்று முதல் முன்பதிவு... நாளை சென்னையில் நிகழ்ச்சி | பிரேசில் நாட்டில் 'வாரணாசி' அப்டேட் தந்த ராஜமவுலி | 'தர்மன்' படத்திற்கு 'பிரஷர்' ஏற்றும் ரசிகர்கள் | 'லோன் வாங்கி, கார் வாங்காதீங்க'! - நடிகர் அப்புக்குட்டி | 'கந்தசாமி' விக்ரம் பாணியில் நடிக்கும் நவாசுதீன் சித்திக் | சீமான் படத்தில் நடிக்கும் போது கேள்வி கேட்டிருக்க வேண்டும் ; மாதவன் ஓபன் டாக் |

துணிவு படத்தை அடுத்து மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித்குமார். இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. இந்த படத்தில் நடித்து முடித்ததும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் தனது 63வது படத்தில் அஜித் குமார் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், அந்த படத்தை முடித்ததும் ஏற்கனவே தன்னை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அடுத்தடுத்து நான்கு படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
தற்போது சூர்யா நடிப்பில் கங்குவா படத்தை இயக்கி முடித்திருக்கும் சிறுத்தை சிவா அப்படத்தின் இறுதி கட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த பணிகளை முடித்ததும் அஜித் நடிக்கும் படத்தின் ஆரம்ப கட்டப் பணிகளில் அவர் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் அஜித்தும், சிறுத்தை சிவாவும் ஐந்தாவது முறையாக இணையப் போகிறார்கள்.