5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
மலையாளத் திரையுலகில் இருந்து தனுஷ் நடித்த கர்ணன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரஜிஷா விஜயன். அடுத்ததாக ஜெய்பீம் படத்திலும் சமூக ஆர்வலராக நடித்து பாராட்டுகளை பெற்றார். தொடர்ந்து தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் தனித்தன்மை கொண்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சினிமாவிற்கு வந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இதுவரை எந்த கிசுகிசுக்களிலும் சிக்காமல் இருந்த ரஜிஷா தற்போது டோபின் தாமஸ் என்கிற மலையாள ஒளிப்பதிவாளருடன் காதலில் விழுந்துள்ளார்.
இந்த செய்தி தான் தற்போது சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த செய்தியை யாரும் யூகமாகவோ இட்டுக்கட்டியோ சொல்லவில்லை. இருவருமே தாங்கள் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் தற்போது பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக ரஜிஷா விஜயனின் திரையுலக தோழிகளான ஆஹானா கிருஷ்ணா, மமிதா பைஜூ ஆகியோர் இந்த ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.