பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! |
ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ள இந்த படத்தில் மொய்தீன் பாய் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையப்படுத்தி அதில் நுழைந்துள்ள மத அரசியலை சுற்றி உருவாகியுள்ள இந்த படத்தில் நிஜ கிரிக்கெட் வீரரான கபில்தேவ் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் பிப்ரவரி ஒன்பதாம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
அதே சமயம் இந்த படம் குவைத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மதம் சார்ந்து வெளியாகும் படங்களை குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்து கொண்ட படங்களை திரையிடும் விஷயத்தில் குவைத் நாடு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. லால் சலாம் படத்தில் விளையாட்டு தொடர்பான மத அரசியல் பேசப்பட்டு உள்ளதால் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.