இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
ஜெயம் ரவி நடிப்பில் சைரன் படம் தற்போது திரைக்கு வந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் சைரன் படம் திரைக்கு வந்த முதல் நாளில் மதுரைக்கு சென்ற ஜெயம் ரவி ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்துள்ளார். அப்போது அந்த தியேட்டர் முன்பு கூடிய ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
இந்த நிலையில் அவருடன் செல்பி எடுத்துக் கொள்ள முடியாத ரசிகர் ஒருவர் சோசியல் மீடியாவில், உங்களுடன் செல்பி எடுக்க வேண்டும் என்று ஆவலுடன் இருந்தேன். ஆனால் முடியவில்லை. உங்களுக்கு வேண்டப்பட்டவர்களுடன் மட்டும் செல்பி எடுத்து விட்டு, என்னைப் போன்றவர்களை அனுப்பி விட்டீர்கள். இது எனக்கு மோசமான நாள். உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை என்று தனது வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்.
அதற்கு ஜெயம் ரவிக்கு எக்ஸ் பக்கத்தில் பதில் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛மன்னித்து விடுங்கள் பிரதர். அன்றைய தினம் கிட்டதட்ட 300 பேருடன் செல்பி எடுத்துக் கொண்டேன். உங்களுடன் எடுப்பதை எப்படி தவறவிட்டேன் என்று தெரியவில்லை. சென்னைக்கு வாருங்கள் கண்டிப்பாக செல்பி எடுத்துக் கொள்வோம். வெறுப்பு வேண்டாம், அன்பை பரப்புங்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.