தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் இஸ்மத் பானு. அசுரன், அயோத்தி, நவம்பர் ஸ்டோரி, பொம்மை நாயகி படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்தவர் தற்போது 'வெப்பம் குளிர் மழை' படத்தின் மூலம் கதை நாயகி ஆகியிருக்கிறார். பாஸ்கல் வேதமுத்து இயக்குகிறார். எம்.எஸ்.பாஸ்கர், ரமா, மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷங்கர் இசை அமைக்கிறார், பிருத்வி ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் முதல் பார்வையை இயக்குனர் வெற்றி மாறன் வெளியிட்டார்.
படம் பற்றி இயக்குனர் பாஸ்கல் வேதமுத்து கூறியதாவது: சமூக பிரச்சனைகளை எடுத்துரைக்கும் படங்கள் எப்போதும் திரைப்பட ஆர்வலர்களின் பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெறுகின்றன. அந்த வகையில் 'வெப்பம் குளிர் மழை' ஒவ்வொரு பார்வையாளரிடமும் வலுவான உணர்ச்சிகளைத் தூண்டும் அத்தகைய சிக்கலை ஆராய்கிறது. திருமணமான தம்பதிகள் சந்திக்கும் இன்றைய சவால்களை மையமாகக் கொண்டது. அதில் உருவாகும் சமூக தாக்கங்கள் மன, உடல் ரீதியாக உறுதியற்ற தன்மைகளை எப்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு உருவாக்குகின்றன என்பதை படம் பேசுகிறது. என்றார்.