தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 171வது படம் பற்றிய தகவல்கள் கடந்த சில நாட்களாக வெளியாகி வருகின்றன. அப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்கப் போவதாகத் தகவல் வெளியானது. அதுபோல தெலுங்கு நடிகரான நாகார்ஜுனாவும் நடிக்கப் போகிறார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாகார்ஜுனா தமிழில் கடைசியாக 2016ல் வெளிவந்த 'தோழா' படத்தில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'குபேரா' படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். தெலுங்கில் வேறு எந்த புதிய படத்திலும் நடிக்காத நாகார்ஜுனா அடுத்த படமாக மீண்டும் ஒரு தமிழ்ப் படம், அதுவும் ரஜினிகாந்த் நடிக்கும் படம் என்பது ஆச்சரியமான தகவல்.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருந்தாலும் 30 வருடங்களுக்கு முன்பே தமிழில் டப்பிங் படங்களான 'உதயம், இதயத்தைத் திருடாதே' ஆகிய படங்களின் மூலம் சூப்பர் ஹிட்களைக் கொடுத்தவர் நாகார்ஜுனா என்பது இன்றைய இளம் ரசிகர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ரஜினி 171வது படம் 'ஜெயிலர், வேட்டையன்' படங்களைப் போலவே மற்ற மொழி நடிகர்கள் நடிக்க மல்டிஸ்டார் படமாக உருவாகும் எனத் தெரிகிறது. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம்.