டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்கள் மற்றும் பிக்பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். தொடர்ந்து தன்னுடைய சோசியல் மீடியாவில் கிளாமர் வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். இந்த நிலையில் திருவண்ணாமலை கோயிலுக்கு தான் சென்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ள ரம்யா பாண்டியன் அதன் பயனாக தனது வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்களை தெரிவித்திருக்கிறார்.
அந்த பதிவில், திருவண்ணாமலை எப்பொழுதுமே என்னுடைய இதயத்தில் ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறது. காரணம் என் வாழ்க்கையை மாற்றிய கோயில் இதுதான். கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு ஏப்ரல் வரை ஒவ்வொரு மாதமும் நான் கிரிவலம் சென்றேன். இந்த கோயில் என்னுடைய ஆன்மிக தொடர்பை குறிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. நான் சொல்லும் ஒவ்வொரு கோயிலும் தெய்வீக அழைப்பாக உணர்கிறேன். இந்த பயணத்தால் உண்மையிலேயே நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.