நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‛வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கூலி' படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அனிருத் இசையமைக்கிறார்.
இந்த டீசரில் எம்.விஸ்வநாதன் இசையில் இடம்பெற்ற ‛நினைத்தாலே இனிக்கும்' பட பாடல் வரிகள் ரஜினி பேசும் வசனங்களாக இடம் பெற்று இருந்தது. அதோடு அந்த டீசரில் ரஜினியின் ‛தங்க மகன்' படத்தில் இடம் பெறும் ‛வா வா பக்கம் வா...' பாடலின் இசையும் பயன்படுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தன்னுடைய அனுமதி இல்லாமல் வா வா பக்கம் வா பாடலின் இசையை பயன்படுத்தி இருப்பதாக கூறி, ‛கூலி' படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார் இளையராஜா. அதில் அனுமதி பெறாமல் பயன்படுத்திய அந்த பாடலின் இசையை நீக்க வேண்டும், இல்லையேல் படக்குழு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காப்புரிமை பிரச்னை தொடர்பாக சமீபகாலமாக இளையராஜா செய்து வரும் நடவடிக்கைகள் சினிமா வட்டாரத்தில் பரபரப்பையும், பேசு பொருளையும் ஏற்படுத்தி உள்ளது. இதை வைத்து இளையராஜாவை பாடலாசிரியர் வைரமுத்து மறைமுகமாக விமர்சித்தது, அதற்கு கங்கை அமரன் வைரமுத்துவிற்கு எதிராக கண்டன வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.