சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் | கேரளாவில் ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான் | ஷாருக்கானின் பதான் பட வசூலை முறியடிக்கும் துரந்தர் | 2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் | மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா |

நடிகர் ரியோ ராஜ் சின்னத்திரையின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தமிழில் பிளான் பண்ணி பண்ணணும், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஆகிய படங்கள் பெரிதளவில் வெற்றியடையவில்லை. கடைசியாக ரியோ ராஜ் நடித்து வெளிவந்த 'ஜோ' திரைப்படம் நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றி பெற்றது.
தற்போது ரியோ ராஜ் பிஸியாக மூன்று படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ் கதாநாயகனாக புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதனை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்குகிறார். மேலும், இதில் கதாநாயகியாக மாளவிகா மனோஜ் மற்றும் பிரீத்தி அஸ்ரானி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. வருகின்ற நாட்களில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.