தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
விஜய்யின் 68வது படமாக 'தி கோட்' படம் உருவாகி வருகிறது. இப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தை அடுத்து தனது 69வது படத்துடன் சினிமாவில் நடிப்பதைவிட்டு விலகி அரசியலில் ஈடுபட உள்ளார் விஜய்.
விஜய்யின் 69வது படம் குறித்து இதுவரையிலும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், யூகங்களாய் பல செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படத்தைத் தயாரித்த நிறுவனமான டிவிவி என்டர்டெயின்மென்ட் நிறுவனம்தான் அந்தப் படத்தைத் தயாரிக்கப் போகிறது என்று செய்திகள் வந்தன.
ஆனால், விஜய் கேட்ட அதிகப்படியான சம்பளத்தை ஏற்காமல் அந்நிறுவனம் விலகியதாக பின்னர் சொன்னார்கள். 69வது படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இன்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு டிவிவி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், “எங்களது அன்புக்குரிய தளபதி விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் வெற்றியின் மூலம் பாக்ஸ் ஆபீசைத் தீப்பற்ற வையுங்கள். உங்கள் இருப்புடன் சிரிப்போடு இருங்கள்,” என்று வாழ்த்தியிருக்கிறது.
இதன் மூலம் விஜய்யின் 69வது படத்தைத் தயாரிக்கப் போவது அவர்கள்தான் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.