மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
நடிகர் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே தனது பெயரில் செயல்பட்டு வந்த டிரஸ்ட் மூலம் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு படிப்பு, மருத்துவ சேவையில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், தற்போது மாற்றம் பவுண்டேஷன் என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி அதன் மூலம் ஏழை எளிய மாணவ மாணவிகள் மற்றும் ஏழை விவசாயிகளுக்கு உதவிகள் செய்து வருகிறார் லாரன்ஸ். அவருடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து பல உதவிகளை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் மாற்றம் பவுண்டேஷன் தொடங்கியதை அடுத்து போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார் லாரன்ஸ். அந்த புகைப்படத்தை தனது பக்கத்தில் வெளியிட்டு, மாற்றம் அறக்கட்டளைக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்றதில் மகிழ்ச்சி. குருவே சரணம் என்று பதிவிட்டுள்ளார்.