பிப்ரவரி மாதத்தில் மோதும் விக்ரம், சூர்யா படங்கள் | பிரம்மயுகம் படத்திற்கு ஆஸ்கர் அங்கீகாரம் | 'பராசக்தி' என் கேரியரில் மறக்க முடியாத படம் : ஸ்ரீலீலா மகிழ்ச்சி | நடிகை ஆன கபடி வீராங்கனை | பிளாஷ்பேக : சிற்பி மனதில் ஏற்பட்ட காயம் | பிளாஷ்பேக்: ஹீரோவின் தந்தையாக நடித்த சிவாஜி | துரந்தர் பட பிரமாண்ட வெற்றி : சிஷ்யனை பாராட்டிய இயக்குனர் பிரியதர்ஷன் | 23 ஆண்டுகள் கழித்து ஒக்கடு பட இயக்குனருடன் இணைந்த பூமிகா | தி ராஜா சாப் : ஆச்சரியப்படுத்திய அம்மு அபிராமி.. அதிர்ச்சி கொடுத்த கயல் ஆனந்தி | தனுஷ் 54வது படத்தின் டப்பிங் பணி துவங்கியது |

இயக்குனர் மற்றும் நடிகர் சசி குமார் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்வி படங்களில் நடித்து அவதிப்பட்டு வந்தார். கடந்த வருடத்தில் அவர் நடித்து வெளிவந்த ' அயோத்தி' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து சமீபத்தில் 'கருடன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படமும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மீண்டும் அவரைத் தேடி பட வாய்ப்புகள் வர தொடங்கி உள்ளன.
இந்த நிலையில் அறிமுக இயக்குனர் இயக்கத்தில் குட் நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் சசி குமார் ஹீரோவாக நடிக்கின்றார். இதில் சசி குமாருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடிக்கவுள்ளார். இது முழுக்க முழுக்க குடும்பத்தை மையப்படுத்தி நடைபெறும் படமாக உருவாகியுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.