5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
தற்போது தமிழில் முன்னணி காமெடியனாக இருப்பவர் யோகிபாபு. சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வரும் அவர், ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கிய ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். இந்த நிலையில் தற்போது ஒரு ஹாலிவுட் படத்திலும் நடிக்கப்போகிறார் யோகிபாபு.
நெப்போலியன் நடிப்பில் 'டெவில்ஸ் நைட்- டான் ஆப் தி நைன்ரூஜ்' என்ற படத்தை தயாரித்தவர் டெல் கணேசன். திருச்சியை சேர்ந்தவரான இவர், தற்போது 'ட்ராப் சிட்டி' என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். டிசம்பர் 13ல் இப்படம் ரிலீசாகிறது.
அந்த படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். குறிப்பாக, ஒரு ஆங்கில ரேப் பாடலுக்கு மைக்கேல் ஜாக்சன் பாணியில் நடனமாடி இருக்கிறார் யோகி பாபு. இதே படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷையும் டெல் கணேசன் ஹாலிவுட்டில் அறிமுகம் செய்கிறார்.