நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
சமீப காலமாக காமெடி நடிகர் கருணாஸ் குணசித்ர வேடங்களில் கவனிக்கத்தக்க நடிப்பை வழங்கி வருகிறார். 'போகுமிடம் வெகுதூரமில்லை' படத்தில் அவர் தெருக்கூத்து கலைஞராக நடித்தது. தற்போது வெளியாகி உள்ள 'சொர்க்கவாசல்' படத்தில் தலைமை ஜெயில் காவலராக நடித்தது பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்த நிலையில் அவர் நடித்து முடித்துள்ள படம் 'சல்லியர்கள்'. போரின் போது காயம் பட்ட வீரர்களுக்கு மருத்துவம் செய்கிறவர்களை 'சல்லியர்கள்' என்று அழைப்பார்கள். அந்த வகையில் இலங்கையில் நடந்த உள்நாட்டு போரில் பணியாற்றிய சல்லியர்களின் வாழ்க்கை கொண்டு இந்த படம் தயராகி உள்ளது.
இந்த படத்தை கிட்டு இயக்கி உள்ளார். கருணாஸ், கரிகாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் சிறப்பு காட்சிகளை திரையிடுவதற்காக பிரான்ஸ், லண்டன், சுவிட்சர்லாந்து, நார்வே உள்ளிட்ட நாடுகளுக்கு கருணாஸ் சென்றுள்ளார். அங்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் 'சல்லியர்கள்' படம் திரையிடப்பட்டது.
அந்த வகையில் கனடாவிலும் 'சல்லியர்கள்' படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில் கலந்து கொண்ட கருணாசை கனடா நாடாளுமன்றம் அழைத்து கவுரவப்படுத்தி உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கனடா நாடாளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி செய்திருந்தார். கனடா நாடாளுமன்ற அவைக்குள் ஒரு தமிழ் நடிகர் அழைக்கப்பட்டு பாராட்டப்பட்டது இதுவே முதல் முறையாகும்.