மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் | சூர்யா தெலுங்கில் நடிக்கும் படம் பிரித்விராஜ் படத்தின் தழுவலா ? | சூரி படத்தில் காமெடியனாக நடிக்க வேண்டும் : யோகி பாபு விருப்பம் | அல்லு அர்ஜுன் படத்திற்கு அனிருத் சம்பளம் எவ்வளவு தெரியுமா... | 15வது திருமணநாள் : மனைவிக்கு காஸ்ட்லி கார் பரிசளித்த அல்லு அர்ஜுன் | துரந்தர் 2 தெலுங்கு பதிப்பில் இடம் பெறும் ஹிந்தி பாடல்கள் | விஜய் குறித்து நான் அப்படி பேசவில்லை : சர்ச்சைக்கு விளக்கம் அளித்த லட்சுமி ராமகிருஷ்ணன் |

போதை பொருள் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் மலையாள நடிகர் சைன் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டுள்ளார்.
மலையாள திரையுலகில் பிரபல வில்லன் நடிகராக நடித்து வருபவர் சைன் டாம் சாக்கோ. தமிழில் 'பீஸ்ட், ஜிகர்தண்டா டபுளக்ஸ்', சமீபத்தில் வெளியான 'குட் பேட் அக்லி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். போதைப் பொருள் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டு ஏற்கனவே இவர் கைதானார். சமீபத்தில் கோழிக்கோடு பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் சோதனையின் போது பிடிபட்ட பெண் ஒருவர் நடிகர்கள் சைன் டாம் சாக்கோ மற்றும் ஸ்ரீநாத் பாஷி என்கிற இருவருக்கும் தாங்கள் ரெகுலராக போதை பொருள் சப்ளை செய்து வருவதாக கூறியிருந்தார்.
மேலும் மலையாள நடிகையான வின்சி அலோசியஸ் என்பவரும் சைன் டாம் சாக்கோ போதை பொருள் பயன்படுத்திவிட்டு படப்பிடிப்பு தளத்தில் தன்னிடம் அத்துமீறியதாக நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி சாக்கோவிடம் விசாரிக்க போலீசார் கொச்சியில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு சென்றபோது அவர் அங்கிருந்து தப்பி ஓடிய சிசிடி காட்சிகள் வெளியாகின.
இந்நிலையில் போதை பொருள் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் எர்ணாகுளம் போலீசார் சாக்கோவிடம் நான்கு மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். பின்னர் கொச்சி போலீசார் அவரை கைது செய்தனர்.