நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படம் லவ் வித் ஆக்ஷன் கதையில் உருவாகி உள்ளது. மே ஒன்றாம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டிரைலரை வெளியிட்டு அடுத்தடுத்து பிரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் ரெட்ரோ படம் குறித்து தற்போது அப்படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர், எடிட்டர் உள்ளிட்ட டெக்னீஷியன்களும் சில தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த செய்தியில், இந்த படத்தில் மொத்தம் 20 ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாம். அதேபோன்று இப்படத்தில் சூர்யாவின் ஓப்பனிங் சீன் ரொம்ப புதுமையாக இருக்கும். மாறுபட்ட கெட்டப்பில் பல மாஸான சீன்களில் சூர்யா நடித்திருப்பதாகவும் சொல்லும் அவர்கள் ரெட்ரோ படத்தின் கிளைமாக்ஸ் யூகிக்க முடியாத வகையில் இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.