சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
அந்த காலத்தில் நல்ல படங்கள் என்றால் புதுமுகங்கள் நடித்து இருந்தாலும், புதுமுகங்கள் இயக்கி இருந்தாலும் மனம் திறந்து பாராட்டுவது இயக்குனர் கே. பாலசந்தர் பாணி. பலருக்கு தன் கைப்பட பாராட்டு கடிதமும் எழுதி அனுப்புவார். அதை அவர் சிஷ்யன் ரஜினிகாந்த் இப்போது அந்த நல்ல பழக்கத்தை கடை பிடிக்கிறார்.
சின்ன படங்கள் என்றாலும் படம் நன்றாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்களை போனில் அழைத்து தனது ஸ்டைலில் புகழ்ந்து தள்ளி பாராட்டுகிறார். அந்தவகையில் சசிகுமார் நடித்த டூரிஸ்ட் பேமிலி படத்தை பார்த்தவர் சசியை பாராட்டியிருக்கிறார். இதை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார் சசிகுமார்.
அதில், ‛‛ 'படம் சூப்பர்' என யார் சொன்னாலுமே மனம் சொக்கிப் போகும். சூப்பர் ஸ்டாரே படம் சூப்பர் எனச் சொன்னால், சந்தோசத்திற்குச் சொல்லவா வேண்டும். 'அயோத்தி', 'நந்தன்' படம் பார்த்து பாராட்டிய ரஜினி சார் ஹாட்ரிக் பரவசமாக 'டூரிஸ்ட் பேமிலி' படம் பார்த்து, "சூப்ப்ப்பர் சசிகுமார்..." என அழுத்திச் சொன்னார்.
"தர்மதாஸாகவே வாழ்ந்திருக்கீங்க.. சொல்ல வார்த்தையே இல்ல, அந்தளவுக்கு வாழ்ந்துட்டீங்க. பல சீன்களில் கலங்கடிச்சிட்டீங்க. சமீபகாலமா உங்களோட கதைத் தேர்வு வியக்க வைக்குது சசிகுமார்..." என ரஜினி சார் சொல்லச் சொல்ல நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மனதில் நிறுத்தி, அத்தனை பேரின் பங்களிப்பையும் வாழ்த்தி ரஜினி சார் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் 'டூரிஸ்ட் பேமிலி' படக் குழுவுக்கு கிடைத்த பொக்கிஷ பட்டயம். தட்டிக் கொடுத்து உற்சாகமூட்டும் உங்களின் தங்கமான மனசுக்கு மிக்க நன்றி ரஜினி சார்...!''
இவ்வாறு சசிகுமார் பதிவிட்டுள்ளார்.