பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் | தலைவன் தலைவி 50 கோடி வசூல் என அறிவிப்பு | யு டியூப் ரிலீஸ் : அமீர்கான் வழியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா ? |
விஜய், அஜித் இருவருமே பெரிய நடிகர்களாக வளராத காலத்தில் இணைந்து நடித்த ஒரே படம் 'ராஜாவின் பார்வையிலே'. 1995ம் ஆண்டு இந்த படம் வெளியானது. அடுத்து இணைந்து நடித்திருக்க வேண்டிய படம் 'நேருக்கு நேர்'. இந்த படம் 1997ம் ஆண்டு வெளியானது. வசந்த் இயக்கிய இந்தப் படத்தில் சிம்ரன், கவுசல்யா, சாந்தி கிருஷ்ணா, கரன், விவேக், தாமு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவா இசை அமைத்திருந்தார். கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்திருந்தார், மணிரத்னம் தயாரித்திருந்தார்.
எலியும், பூனையுமாக மோதிக் கொள்ளும் இரண்டு இளைஞர்களின் கதை. இந்த படத்தில் முதலில் விஜய்யும், அஜித்தும் இணைந்து நடித்தார்கள். சில காட்சிகள் மற்றும் பாடல்கள் படமாக்கப்பட்ட நிலையில் அஜித் படத்திலிருந்து விலகினார். விஜய் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்து தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் குறைந்ததாக அஜித் உணர்ந்ததால் விலகியதாக கூறப்பட்டது.
அதன் பிறகு அஜித்திற்கு பதிலாக சூர்யா நடித்தார். இது சூர்யாவிற்கு முதல் படம். மகனை ஹீரோவாக்க சிவகுமார் முயற்சித்துக் கொண்டிருந்த நேரத்தில் சிவகுமாரின் குடும்ப நண்பரான வசந்த் கேரக்டர் பற்றி எடுத்துச் சொல்லி நடிக்க வைத்தார். இந்த படத்திற்கு பிறகும் விஜய், சூர்யா இணைந்து சில படங்களில் நடித்தனர். ஆனால் இந்த படத்திற்கு பிறகு விஜய், அஜித் இணைந்து நடிக்கவில்லை.