நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
தமிழ் சினிமாவில் 50 ஆண்டை கடந்தவர்கள் கமல்ஹாசன் போன்ற ஒரு சிலரே இருக்கிறார்கள். ரஜினி அந்த சாதனையை தொடப்போகிறார். வெண்ணிற ஆடை மூர்த்தி 60வது ஆண்டை தொட்டுள்ளார். அவர் முதலில் நடித்த வெண்ணிற ஆடை படம், 1965ம் ஆண்டு வெளியானது. அந்தவகையில் 60வது ஆண்டை தொட்டு சாதனை படைத்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு நடிப்பை நிறுத்திவிட்டார்.
இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் 620 படங்களில் நடித்தவர், இப்போது 89 வயதை தொட்டு இருப்பதால் வீட்டில் ஓய்வில் இருக்கிறார். இந்த சாதனை குறித்து சில மீடியாக்களில் பேசியவர், ‛‛நான் நிறைவாக இருக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக என்னை ரசித்த ரசிகர்கள், ஆதரவு கொடுத்த சினிமாகாரர்களுக்கு நன்றி'' என்று பேட்டி கொடுத்து இருக்கிறார்.
சமீபகாலமாக அவர் சினிமா விழாக்கள், பொது நிகழ்ச்சிகளுக்கும் அதிகம் வருவது இல்லை. இவருக்கு ஒரே மகன் அமெரிக்காவில் உயர் பதவியில் இருக்கிறார். அதனால் அவ்வப்போது அமெரிக்கா சென்று வருவார் வெண்ணிற ஆடை மூர்த்தி.