டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

அன்பு மகன் மனோஜ் திடீர் மறைவால் மனம் உடைந்து போய்விட்டார் இயக்குனர் பாரதிராஜா. கடந்த பல வாரங்களாக அவரை சினிமா நிகழ்ச்சி, பொது நிகழ்ச்சிகளில் பார்க்க முடியவில்லை. அவரையும் சினிமாகாரர்கள் சந்தித்ததாக தெரியவில்லை. இசையமைப்பாளர் இளையராஜா அவரை சந்தித்து துக்கம் கேட்டார். பின்னர், அவர் யாரையும் சந்திக்கவில்லை.
பாரதிராஜா எப்படி இருக்கிறார் என்று விசாரித்து பார்த்தால், 'கடந்த 2 மாதங்களாக அவர் சென்னையில் இல்லை. மன ஆறுதலுக்காக மலேசியா கோலம்பூரில் உள்ள மகள் ஜனனி வீட்டில் இருக்கிறார். அங்கே ஓய்வெடுத்து வருகிறார். மலையாளத்தில் மோகன்லாலுடன் அவர் நடித்த 'தொடரும்' படம் பெரிய ஹிட். ஆனாலும், மனம், உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இப்போதைக்கு அவருக்கு தேவை அமைதியான மனநிலை என்பதால் குடும்பத்தினர் இந்த முடிவெடுத்து உள்ளனர். எப்போது சென்னை திரும்புவார் என்று தெரியவில்லை' என்கிறார்கள்.