டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம் 'டிராகன்'. இந்த ஆண்டில் அதிக லாபத்தைக் கொடுத்த படம் என்ற பெருமையைப் பெற்ற ஒரு படம்.
இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோஹர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தார். இந்தக் காலத்தில் ஒரு படம் 100 நாள் கடந்து ஓடுவதும், 150 கோடி வரை வசூலிப்பதும் அபூர்வமான ஒரு விஷயம். அப்படியிருக்கும் போது கதாநாயகிகள் இருவருமே நேற்று நடந்த 100வது நாள் விழாவில் கலந்து கொள்ளவில்லை.
கயாடு லோஹர் மலையாளப் படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக கேரளாவில் இருப்பதாகத் தகவல். படத்தில் தனக்கான முக்கியத்துவம் அதிகமாக இல்லாததால் இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்வுகள் எதிலுமே ஆரம்பம் முதலே புறக்கணித்து வந்ததால் இதிலும் அனுபமா கலந்து கொள்ளவில்லையாம்.
விழாவுக்கு இரண்டு ஹீரோயின்களும் வருவார்கள், வளைத்து வளைத்து வீடியோ எடுக்கலாம் என வந்த யு டியூபர்கள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.