இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் |
கேஜிஎப், காந்தாரா போன்ற பிரம்மாண்ட படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் அடுத்து வழங்கவிருக்கும் பான் இந்தியா படம் “மஹாவதார் நரசிம்மா” . விஷ்ணுவின் அவதாரங்களை தனித்தனி அனிமேஷன் படமாக தயாரிக்கும் திட்டத்தின் கீழ் முதல் படமாக இந்த படம் வெளிவருகிறது.
இந்தப் படத்தின் கதை, இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது. விஷ்ணுவின் தீவிர சீடரான பிரஹலாதனைச் சுற்றி இப்படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது. அவர் தனது தந்தை இரண்யகசிபுவின் எதிர்ப்பை மீறி விஷ்ணுவை வணங்குகிறார். இறைவன் பிரம்மாவிடமிருந்து அமரத்துவம் பெற்ற இரண்யகசிபுவை அழிக்க, பகவான் விஷ்ணு தனது அரிய அவதாரமான நரசிம்மராக அவதரிக்கிறார். என்பதுதான் படத்தின் கதை.
வருகிற 25ம் தேதி படம் வெளிவருகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு தணிக்கை குழு 'யுஏ 'சான்றிதழ் வழங்கி உள்ளது. படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதற்காக இந்த சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஒரு புராண படத்திற்கு அதுவும் அனிமேஷன் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கி இருப்பது இதுவே முதல் முறை என்கிறார்கள். படத்தின் நாயகன் பிரஹலாதன் சோகத்துடன் யுஏ சான்றிதழை சுமந்து நிற்பது போன்ற படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.