டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

அம்மா என்று அழைக்கப்படும் மலையாள திரையுலக நடிகர் சங்கத்திற்கு நேற்று (ஆக-15) தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் நடிகர் சங்க தலைவராக நடிகை ஸ்வேதா மேனன் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். நடிகர் சங்கம் துவங்கியதில் இருந்து இத்தனை வருடங்களில் இப்போதுதான் ஒரு பெண் நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்றுள்ளார். அதுமட்டுமல்ல மொத்தம் உள்ள 17 நிர்வாக குழு உறுப்பினர்களின் கிட்டத்தட்ட சரிக்கு சமம் என்பது போல எட்டு பேர் பெண்கள் என்பதும் இப்போதுதான் முதல்முறையாக நடக்கும் விஷயம். அந்த வகையில் இந்த முறை நடிகர் சங்கத்தில் பெண்களின் கை சற்றே ஓங்கி இருக்கிறது என்று சொல்லலாம்.
இதில் ஸ்வேதா மேனன் மற்றும் திரிஷ்யம் நடிகையான அன்ஷிபா ஹாசன் இருவரை தவிர மற்ற பெண் உறுப்பினர்களும் சரி, ஆண் உறுப்பினர்களும் சரி அவ்வளவு பிரபலம் இல்லாத நடிகர் நடிகைகள் தான். இந்த 17 பேரில் நடிகை அன்ஷிபா ஹாசன் தேர்தலுக்கு முன்பாகவே இணைச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இத்தனை வருடங்களில் நடிகர் சங்க பொறுப்புகளில் நட்சத்திர நடிகர்களே பெருமளவு பொறுப்பு வகித்து வந்த நிலையில் இந்த புதிய நிர்வாக குழு முற்றிலும் ஆச்சரியமாக ஒன்றுதான்.