டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தமிழ் சினிமாவில் வடிவேலு, பார்த்திபன் கூட்டணிக்கு வரவேற்பு உண்டு. இருவரும் இணைந்தால் வெடி சிரிப்புதான். அதேபோல், வடிவேலு, பிரபுதேவா இணைந்து நடித்த படங்களும் ஒரு காலத்தில் பேசப்பட்டன. குறிப்பாக, ‛காதலன், மனதை திருடிவிட்டாய், ராசையா, லவ்பேர்ட்ஸ், எங்கள் அண்ணா' படங்களின் காமெடி இன்றும் பிரபலம். இப்போது கண்ணன் ரவியின் தயாரிப்பில், பிரபுதேவா, வடிவேலு 25 ஆண்டுகளுக்குபின் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தை சாம் இயக்குகிறார்.
முன்போல இந்த கூட்டணி வெற்றி பெறுமா என்று விசாரித்தால், கடந்த சில ஆண்டுகளாக பிரபுதேவா ஹீரோவாக நடித்த பல படங்கள் ஓடவில்லை. அவர் நடித்த சில படங்கள் ரிலீஸ் ஆகாமல் இருக்கின்றன. வடிவேலுவும் ரீ என்ட்ரியில் ஜெயிக்கவில்லை. அந்த காலத்தில் நடிகர்கள் மட்டுமல்ல, காமெடி டிராக் எழுத பல திறமைசாலி எழுத்தாளர்கள் இருந்தார்கள். இப்போது காமெடியை இயக்குனர்களே எழுதுவதால் அது வொர்க் அவுட் ஆவதில்லை. வடிவேலுவும் இயக்குனர் சுதந்திரத்தில் நிறைய தலையிடுகிறார். நிறைய டயலாக்குகளை மாற்ற சொல்கிறார் என கூறப்படுகிறது. பிரபுதேவாவுக்கும் வயதாகிவிட்டது. ஆகவே படம் வந்து, காமெடி ஹிட்டானால்தான் எதுவும் பேச முடியும் என்கிறார்கள்.