லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கடந்த ஒரு மாத காலமாக இன்ஸ்டாகிராமில் எந்த பதிவுகளும் வெளியிடாமல் இருந்த ஹன்சிகா நேற்று மும்பையில் உள்ள தனது வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அதில், அழகாக அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலை படங்கள் இடம் பெற்றுள்ளது. அதோடு எனது பாப்பாவை வீட்டிற்கு வரவேற்கிறோம். கணபதி பாப்பா மோரியா என்று ஒரு பதிவிட்டுள்ளார். ஆனால் இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் ஹன்சிகாவின் கணவர் இடம்பெறவில்லை. கடந்த 2022ம் ஆண்டில் சோஹைல் கதூரியா என்பவரை திருமணம் செய்து கொண்ட ஹன்சிகா, 2024 ஆம் ஆண்டில் தங்களது இரண்டாவது திருமண நாளை கணவருடன் கொண்டாடினார். சமீபகாலமாக அவர் கணவரை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில், இதுவரை அதற்கு ஹன்சிகா எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. விநாயகர் சதுர்த்தி விழாவையும் அவர் தனிமையில் கொண்டாடி இருப்பது அந்த செய்தியை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.