டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

மூத்த இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் உடல்நலப் பிரச்னையால் சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரட்டை இசையமைப்பாளர்களான சங்கர் கணேஷ், ‛மகராசி' படத்தின் மூலம் இசையமைப்பாளர்கள் ஆனார். தொடர்ந்து இவர்கள் இசையில் பல்வேறு வெற்றி படங்கள் வெளியாகின. இவர்களில் சங்கர் மரணம் அடைந்துவிட்டார். கணேஷ் சினிமாவை விட்டு விலகி ஓய்வில் இருக்கிறார். தனது இசை கூட்டாளி சங்கர் மறைந்த பிறகும், தனது பெயரை சங்கர் கணேஷ் என பெருமையோடு அழைத்து வருகிறார்.
இந்நிலையில் கணேஷிற்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். ஏற்கனவே அவருக்கு இதய பிரச்னை இருந்தாலும், மழை, குளிர் காரணமாகவும் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது என்று குடும்பத்தினர் கூறி உள்ளனர்.