டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என்டிஆர் படங்களில் நடித்து வருவதை தாண்டி நிறைய விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஹைதராபாத்தில் ஒரு விளம்பர படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்த ஜூனியர் என்டிஆருக்கு படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டுள்ளது. சற்று நேரத்தில் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் இந்த செய்தி தீயாக பரவி ஜூனியர் என்டிஆருக்கு பெரும் பாதிப்பு போல் பரவியது.
இதைத்தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் தரப்பில் இருந்து வெளிவந்த அறிவிப்பின்படி, "ஜூனியர் என்டிஆர் இன்று ஒரு விளம்பர படத்தின் படப்பிடிப்பின் போது சிறு காயம் அடைந்தார். மருத்துவ ஆலோசனையின் பேரில், அவர் பூரண குணமடைய அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஓய்வில் இருப்பார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறோம். ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் எந்தவிதமான யுகங்களில் இருந்து விலகி இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளனர்.