டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி 300 கோடி வசூலைக் கடந்த படம் 'காந்தாரா சாப்டர் 1'. சரித்திரக் காலப் படமாக உருவான இந்தப் படத்தில் அரங்க அமைப்பு, விஎப்எக்ஸ், ஆடை வடிவமைப்பு உள்ளிட்டவை ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் பெரிதும் பாராட்டப்படுகிறது.
ஒரு பக்கம் மன்னர் குடும்பத்தினருக்கான ஆடை வடிவமைப்பு, மறுபக்கம் காந்தாரா பழங்குடியினருக்கான ஆடை வடிவமைப்பு என இருவேறு விதமான ஆடை வடிவமைப்பு படத்தில் இடம் பெற்றிருந்தது. இப்படத்தின் ஆடை வடிவமைப்பை ரிஷப் ஷெட்டியின் மனைவி பிரகதி ஏற்று சிறப்பாகச் செய்துள்ளார். இதற்கு முன்பு 'காந்தாரா, பெல்பாட்டம்' ஆகிய கன்னடப் படங்களுக்கும் காஸ்ட்யூம் டிசைன் செய்துள்ளார்.
படம் குறித்து, “காந்தாரா சாப்டர் 1-ன் ஒரு பகுதியாக இருப்பது உண்மையிலேயே மறக்க முடியாத பயணமாக இருந்தது. இவ்வளவு ஆழமான, மூலமான, மற்றும் தெய்வீகமான கதைக்கு உடைகளை வடிவமைப்பது வேலையை விட உணர்வுபூர்வமாக இருந்தது. இந்த அற்புதமான தரிசனத்தின் சிறிய பகுதியை நெய்ததற்கு நன்றி,” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
அது மட்டுமல்லாது 'காந்தாரா மற்றும் காந்தாரா சாப்டர் 1' ஆகிய படங்களில் கொஞ்ச நேரமே வரும் சிறப்புத் தோற்றத்திலும் அவர் நடித்துள்ளார்.