டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

பாலிவுட்டின் முன்னணி நடிகை பூமி பட்னேகர். தற்போது வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். லஸ்ட் ஸ்டோரிஸ், சன்ஞ்சிரியா, பாலா, பூத், பாதாகி டோ, ரக்ஷா பந்தன், தி லேடி கில்லர் போன்றவை அவர் நடித்த முக்கியமான படங்கள். தற்போது 'டல் டால்' என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தான் ஒரு அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எனக்கு 'எக்ஸிமா' என்ற அரிய வகை தோல் நோய் இருக்கிறது. சிறுவயதில் இருந்தே இந்தப் பிரச்னை இருந்திருக்கிறது. ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த பிரச்னை முழுமையாக கண்டறியப்பட்டது.
இதனால் அடிக்கடி பயணம் செய்யும் போது அல்லது அதிக மன அழுத்தத்தை அனுபவிக்கும்போது எனது தோலில் தடிப்புகள் மற்றும் அதிகப்படியான அரிப்புகள் ஏற்படும். அந்த வலியால் தான் மிகவும் சங்கடத்தை சந்தித்து வருகிறேன். இதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறேன்'' என்று கூறியிருக்கிறார்.