டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

சிம்புவின் அடுத்த படமாக ‛அரசன்' உருவாகிறது. தாணு தயாரிக்க, வெற்றிமாறன் இயக்குகிறார். வட சென்னை பின்னணியில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு கடந்தவாரம் வெளியானது. தொடர்ந்து நேற்று தியேட்டர்களில் அறிமுக வீடியோவை வெளியிட்டனர். இன்று யுடியூப்பில் வெளியிட்டனர்.
வட சென்னை இளைஞராக நடித்துள்ள சிம்பு, மூன்று கொலைகள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். நான் கொலை செய்யவில்லை என நீதிபதியிடம் சிம்பு வாதிட மற்றொருபுறம் ஒருவரை கொலை செய்து விட்டு உடல் முழுக்க ரத்தம் படிந்த காட்சிகளுடன் அவர் இருக்கிறார். மேலும் இதனை படமாக எடுப்பதற்கு நெல்சன் வந்து சிம்புவிடம் கதை கேட்பது போன்று சில காட்சிகள் காமெடியாகவும் உள்ளன. அதோடு சிம்பு எனது ரோலில் தனுஷ் நடிக்கலாம் என கூறும் காட்சிகளும் வரவேற்பை பெற்றுள்ளன.
அரசன் படத்தின் மூலம் முதன்முறையாக சிம்பு, அனிருத் கூட்டணி அமைத்துள்ளனர். இதற்கிடையே சிம்பு வெளியிட்ட பதிவில், ‛‛அன்புள்ள அனிருத், இறுதியாக நமது கூட்டணியில் ஒரு படம். அரசன் புரொமோவை பயராக மாற்றிவிட்டீர்கள். எல்லாவற்றுக்கும் மற்றும் உங்கள் பிறந்தநாளுக்கும் வாழ்த்துகள்'' என குறிப்பிட்டுள்ளார்.