டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் அக்டோபர் 1ம் தேதி பான் இந்தியா படமாக வெளியானது 'காந்தாரா சாப்டர் 1'. எதிர்பார்த்ததைப் போலவே படம் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது 818 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டில் வெளிவந்த இந்தியப் படங்களில் அதிக வசூலைப் பெற்று முதலிடத்தில் இருந்த 'சாவா' ஹிந்திப் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.
இப்படம் கர்நாடகாவில் 200 கோடிக்கு மேல், வட இந்திய மாநிலங்களில் 200 கோடி, தெலுங்கு மாநிலங்களில் 100 கோடி, வெளிநாடுகளில் 100 கோடி, தமிழகம் மற்றும் கேரளாவில் தலா 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
படத்தின் வியாபாரம் 340 கோடி என்பதால் இப்படம் எப்படியான லாபத்தைக் கொடுக்கப் போகிறது என்ற கேள்வி இருந்தது. ஆனால், தற்போது 800 கோடி வசூலையும் கடந்துவிட்டதால் படத்தின் லாபமும் கிடைத்துவிட்டது.