டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

நடிகர் கருணாகரன் தமிழ் சினிமாவில் நகைச்சுவை, குணசித்திரம் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கலகலப்பு, சூது கவ்வும், விவேகம், தொடரி, ஜிகர்தண்டா, ரெட்ரோ, யாமிருக்க பயமே, கப்பல், இன்று நேற்று நாளை போன்ற பிரபலமான படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பெற்றவர்.
சென்னையில் நடைபெற்ற ஆர்யன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கருணாகரன் கூறுகையில், "என்னுடைய முதல் படம் 'கலகலப்பு'. அதன் பின் 'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'யாமிருக்க பயமே' என்று தொடர்ந்து ஹிட் படங்களாக அமைந்தது. அதனால் சினிமா இப்படித்தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். சில படங்கள் சரியாக வரவேற்பு கிடைக்காத போது சினிமாவை விட்டு போகலாம் என பலமுறை முடிவு எடுத்திருக்கிறேன். அப்போது விஷ்ணு தான் என்னைப் போன்ற திறமையான நடிகர்கள் எல்லாம் அப்படி சென்றுவிடக் கூடாது என கூறி, அவருடைய தயாரிப்பு நிறுவனத்தில் வாய்ப்புகள் கொடுத்து மீண்டும் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார். அது இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்கு கண்டிப்பாக நன்றாக ஓடும்" என தெரிவித்துள்ளார்.