ஜனநாயகன் படத்தின் ஹிந்தி தலைப்பு 'ஜன் நேட்டா' | சிக்மா படத்தின் டீசர் எப்படி இருக்கு | 60 நாட்களில் நிறைவு பெற்ற கென் கருணாஸ் பட படப்பிடிப்பு | முதன்முறையாக இணையும் சிரஞ்சீவி மோகன்லால் கூட்டணி | பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட பார்வதி | ஜன., 7ல் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ரஜினி பங்கேற்கிறார் | கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது | 30 வருடம் கழித்து கேரள துறைமுகத்திற்கு விசிட் அடித்த பம்பாய் படக்குழு | மறைந்த நடிகர் சீனிவாசனின் உண்மையான வயது என்ன? கிளம்பிய விவாதமும் தெளிந்த உண்மையும் | ஜெயிலர் 2வில் பெரிய ரோலில் நடிக்கிறேன் : சிவராஜ்குமார் |

'லக்கி பாஸ்கர்' படம் துல்கர் சல்மானுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததோடு, அதன் பிறகு மலையாளத்தில் அவர் தயாரித்த 'லோகா சாப்டர் ஒன்' படமும் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் அவர் நடித்து வருகிறார். தமிழில் தற்போது அவர் தயாரித்து நடித்திருக்கும் 'காந்தா' என்ற படம் நவம்பர் 14ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த ஒரு பிரியாணி அரிசி நிறுவனத்திற்கு விளம்பர தூதராகவும் செயல்பட்டு வருகிறார் துல்கர் சல்மான். அந்த நிறுவனத்தின் பிரியாணி அரிசியை சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள ஒரு கேட்டரிங் நிறுவனம் திருமண நிகழ்ச்சியில் சமைத்துள்ளார்கள். ஆனால் அந்த பிரியாணியை சாப்பிட்ட பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் தற்போது அந்த பிரியாணி அரிசி நிறுவனத்திற்கு மட்டுமின்றி அதில் விளம்பர தூதராக இருக்கும் நடிகர் துல்கர் சல்மான் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.