மலேசியாவில் குட்டி கதை சொல்வாரா விஜய் | மகனுக்காக போன் போடும் அப்பா : சிறை படத்தில் நடக்கும் சுவாரஸ்யம் | ரஜினியின் மூன்று முகம் ரீ ரிலீஸ் ஆகுது : ஆர்.எம்.வீரப்பன் மகன் தகவல் | ஜனநாயகன் படத்தின் ஹிந்தி தலைப்பு 'ஜன் நேட்டா' | சிக்மா படத்தின் டீசர் எப்படி இருக்கு | 60 நாட்களில் நிறைவு பெற்ற கென் கருணாஸ் பட படப்பிடிப்பு | முதன்முறையாக இணையும் சிரஞ்சீவி மோகன்லால் கூட்டணி | பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட பார்வதி | ஜன., 7ல் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ரஜினி பங்கேற்கிறார் | கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது |

முன்னணி பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே தற்போது நடித்துள்ள படம் 'சாலி மொஹபத்'. இந்த படத்தை டிஸ்கா சோப்ரா இயக்கியுள்ளார். திவ்யேந்து சர்மா மற்றும் அனுராக் காஷ்யப், அன்ஷுமான் புஷ்கர், சவுரசேனி மைத்ரா மற்றும் ஷரத் சக்சேனா நடித்துள்ளனர். ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் மனிஷ் மல்ஹோத்ராவின் ஸ்டேஜ்5 புரொடக்ஷன் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன.
நகரத்தின் நெருக்கடியில் வாழும் ஸ்மிதா என்ற ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாக கொண்டது. அவள் சந்தித்த துரோகம், வஞ்சகம் மற்றும் ஒரு கொலை இவற்றில் சிக்கி தவிப்பது மாதிரியான கதை.
கோவா திரைப்பட விழா, சிக்காகோவில் நடந்த தெற்காசிய திரைப்பட விழா ஆகிவற்றில் திரையிடப்பட்ட இந்த படம் தற்போது ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.