டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

செல்வராஜ் செல்வமணி இயக்கத்தில் துல்கர் சல்மான் பாக்யஸ்ரீ, ராணா நடித்த 'காந்தா' படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் இன்று நடந்தது. இதில் துல்கர் பேசியது: என் அப்பா மம்முட்டி மூன்று தேசிய விருதுகள் வாங்கி இருக்கிறார். மற்ற விருதுகளும் நிறைய வாங்கி இருக்கிறார், இன்னும் வாங்குவார். இதுவரை நான் தேசிய விருது வாங்கியதில்லை, காந்தா படத்தை பார்த்தவர்கள், காந்தா விமர்சனங்களில் எனக்கு தேசிய விருது கிடைக்கும் என்கிறார்கள். அப்படி கிடைத்தால் மகிழ்ச்சி.
சமுத்திரக்கனி, ராணா, நான், பாக்ஸ்ரீ ஆகியோர் போட்டி போட்டு நடிப்போம். குறிப்பாக குமாரி என்ற அந்த ஹீரோயின் கேரக்டருக்காக பல மாதங்கள் காத்திருந்து பாக்ஸ்ரீயை நடிக்க வைத்தார் இயக்குனர். அவர் நடிப்பும் அருமையாக வந்துள்ளது. அந்த கால சினிமாவை கருவாக வைத்து உருவாக்கிய இந்த படம் மக்களிடையே வரவேற்பு பெற்றது மகிழ்ச்சி. இதுவரைக்கும் 40க்கும் அதிகமான படங்கள் நடித்திருக்கிறேன். என் நடிப்பில் அப்பாவுக்கு பிடித்த படம் காந்தாவாக இருப்பது மகிழ்ச்சி.
நடிகர்கள் எம்ஜிஆர், ஜெமினி கணேசனை நான் இமிடெட் பண்ணுவதில்லை. அவர்கள் தாக்கம் படத்தில் இருந்திருந்தால் அதற்கு இயக்குனர் தான் காரணம். ராணாவும், நானும் பணம், பிஸினஸ்க்காக இந்த படத்தை பண்ணவில்லை. சினிமா மீதான ஆர்வம் காரணமாக பண்ணினோம். இவ்வாறு அவர் பேசினார்.