டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தமிழில் 'திமிரு, மரியான்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் விநாயகன். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் வர்மா என்கிற மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமானார். அதே சமயம் இவர் படங்களில் நடிக்கும் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. இவரை படப்பிடிப்புகளில் எளிதாக கையாள முடிவதில்லை என்பது பெரும்பாலான இயக்குனர்களின் கருத்தாக இருக்கிறது.
இன்னொரு பக்கம் பொதுவெளியில் இவர் பேசும் பேச்சுக்களும் நடந்து கொள்ளும் விதமும் இவரை பற்றிய ஒரு எதிர்மறை பிம்பத்தையே அனைவரிடமும் தோற்றுவித்து இருக்கின்றன. இந்த நிலையில் வரும் டிசம்பர் 5ம் தேதி மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியாகும் 'களம் காவல்' படத்தில் மம்முட்டிக்கு இணையான முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் விநாயகன்.
இந்தப் படம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் விநாயகன் பேசும்போது, “எனக்கு பொதுவெளியில் எப்படி பேசுவது என்பது சரியாக தெரியவில்லை. குறிப்பாக மக்களின் கண்களை நேருக்கு நேர் பார்த்து பேசுவதில் எனக்கு பிரச்னை இருக்கிறது. எனக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விருப்பம்தான் என்றாலும் அதில் கலந்து கொள்ளும் 10 பேரில் யாராவது இரண்டு பேர் ஏதாவது தேவையில்லாத கேள்விகளை கேட்டு விடுகிறார்கள். என் இயல்பான சுபாவத்தால் நானும் டென்ஷன் ஆகி என்ன பேசுகிறோம் என தெரியாமல் பேசி விடுகிறேன். அதனாலேயே பொதுவெளியில் வருவதையும் பொது விழாக்களில் கலந்து கொள்வதையும் தவிர்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.